திருவள்ளூர் கலெக்டருக்கு மாத ஊதியம் வழங்க தடை
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தாலுகா அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றனது. இந்த கட்டிடத்தின் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகவும், ஒரு வருடமாக வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் கட்டிடத்தின் உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாதவரம் தாசில்தார் மற்றும் வருவாய்துறை செயலர் ஆகியோருக்கு இம்மாத ஊதியம் வழங்க தடை விதித்து உத்தரவிட்டனர்.