எஸ்.ஆர்.எம்.யு சார்பில் நேற்று சென்னை கோட்ட கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கண்டனங்களை நிலைநிறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் கூறியதாவது "அனைத்து ஸ்லீப்பர் கோச்சுகளும், முன்பதிவு செய்த பயணிகளால் நிரம்பியிருக்கும் போது யாரிடம் அபராதம் வசூலிப்பது, அபராதம் பெற்றுக்கொண்டு அந்த பயணியை ரசீது கொடுத்த பின்னர் கோச்சை விட்டு வெளியேற்றுவது எந்த சட்டத்தில் உள்ளது எனவும், நிர்வாகத்தின் ஆள்காட்டிகள் எந்த வேலை செய்கிறார்கள் என்பதை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன?, கடந்த ஜூன் 14 ஆம் தேதி மீட்டிங்கில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்தாத மர்மம் என்ன?, பணிநிமித்தமாக தொழிலாளர்களை சமூக விரோதிகள் தாக்கப்படும் போது அதற்கு தீர்வு காண காவல் துறை உயர் அதிகாரிகளை நாடும் நிலை உள்ளது".
இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களுடன் போராட்டம் நடைபெற்றது.