சென்னையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடிவரும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற மருத்துவமனை வளாகத்திலேயே மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![The son is married to the hospital for father's desire](http://image.nakkheeran.in/cdn/farfuture/7dtKQw0oCCF1o5aT5Ca6B50fODgpYO7tPXDMzf4WyrU/1547901336/sites/default/files/inline-images/a2_9.jpg)
திருவெற்றியூரை சேர்ந்த சுதேஸ் என்பவர் சரக்கு ரயில் மோதி, விபத்தில் சிக்கி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவந்த அவருக்கு விரைவில் அறுவைசிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட உள்ளது. இந்நிலையில் சுதேஸ் தனது மகன் சதீஸ் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
![The son is married to the hospital for father's desire](http://image.nakkheeran.in/cdn/farfuture/QEWu4KAwISfjBU6nVtHn3e00MEj4i1QXr8DNsNvTb7w/1547901356/sites/default/files/inline-images/a3_2.jpg)
தந்தையின் ஆசையை நிறைவேற்ற சதீஷ் அவர் காதலித்த பெண்ணான சித்ரா என்பவரை இருவீட்டாரின் ஒப்புதலுடன் மருத்துவமனை வளாகத்திலுள்ள கோவிலில் உடனடியாக திருமணம் செய்து கொண்டார்.
![The son is married to the hospital for father's desire](http://image.nakkheeran.in/cdn/farfuture/kUgG032Ur0jytdT10WQstGC1X7HG7B7x0N3p1lNUpGM/1547901374/sites/default/files/inline-images/a1_11.jpg)
அதன்பின் மணமக்கள் ஜோடியாக சென்று படுக்கையில் இருந்த சுதேசிடம் ஆசிபெற்றனர். உயிருக்கு போராடும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற மருத்துவமனை வளாகத்திலேயே மகன் திருணம் செய்துகொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.