Published on 07/07/2018 | Edited on 07/07/2018
புதுச்சேரி அருகிலுள்ள ஊசுட்டேரியில் ஆளுநர் கிரண்பேடி படகில் சென்று ஏரியை ஆய்வு மேற்கொண்டார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடத்தும் ஆய்வை அதிகாரிகள் புறக்கணித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளை எச்சரித்திருந்ததால் யாரும் உடன் செல்லவில்லை. வனத்துறையினர் மட்டும் உடன் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி,
"புதுச்சேரியில் தற்போது நான் முக்கியத்துவம் அளிப்பது தூய்மை பணிகளுக்கும், நீர் ஆதாரத்தை பாதுகாப்பதற்கும் தான். இன்று நான் தூய்மை பணிகளுக்கான ஆய்வுக்காக வந்துள்ளேன். அனைத்து இடங்களும் தூய்மையாக உள்ளது. நான் எதுவுமே செய்யவில்லை. அவரவர்களின் பொருப்பை உணர்ந்து செயல்பட்டுள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாளை தெரிவிக்கிறேன்" என்றார்.