Published on 30/12/2019 | Edited on 30/12/2019
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2,544 ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,924 ஊராட்சித் தலைவர், 38,916 வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குச்சாவடி மையத்திற்கு மாலை 05.00 மணிக்குள் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவையொட்டி சுமார் 61,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27- ஆம் தேதி நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜனவரி 02- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.