Skip to main content

65 ஆயிரம் கன அடியை தொட்டது நீர்வரத்து... விரைவில் முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை! 

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கேஎஸ்ஆர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 75,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

 

touches 65 thousand cubic feet ... Mettur Dam to reach full capacity soon!

 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 50,000 கன அடியாக இருந்து வந்த நிலையில் தற்போது 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18,700 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.590 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 86.679 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. தற்போது அதிகரித்துள்ள நீர்வரத்தால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்