
கடலூரில் மாநகராட்சி ஊழியர்கள் சொத்து வரி பாக்கியை வசூலிக்க கடப்பாரையுடன் சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சொத்து வரி பாக்கியை வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் மிகவும் கெடுபிடியாக அதிகாரிகள் சொத்து வரியை வசூல் செய்து வருகின்றனர். இதனால் வணிகர்களும் பொதுமக்களும் தங்கள் பாதிக்கப்படுவதாகவும், வரியை செலுத்த தங்களுக்கு கால வாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
'சொத்துவரி கொடுக்காத வீடுகளுக்கு கடப்பாரையுடன் சென்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. சொத்து வரி செலுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை பாக்கி இருப்பவர்கள் வீட்டிற்கு மாநகராட்சி ஊழியர்கள் கடப்பாரையுடன் வந்து வசூல் செய்கின்றனர். ஆனால் பல லட்சங்கள் வரி செலுத்தாமல் இருப்பவர்களை விட்டு விடுகிறார்கள்' என கடலூர் மாநகராட்சி பகுதி மக்கள் குமுறுகின்றனர்.