Published on 30/07/2023 | Edited on 30/07/2023
![Promotion of 4 additional SP](http://image.nakkheeran.in/cdn/farfuture/COuvufi-EaSW-DIuXzBzDt6jUEYchU09Oqy92f460tU/1690695420/sites/default/files/inline-images/ips_18.jpg)
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் நான்கு பேருக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில் திருச்சி சிறப்பு போலீஸ் படை கூடுதல் காவல் கண்காணிப்பார் ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் காவலர் தேர்வு பள்ளி கூடுதல் காவல் கண்காணிப்பார் ரமேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அரியலூர் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பார் மலைச்சாமி சென்னை அறிவுசார் சொத்து பிரிவின் அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பார் செல்லபாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.