Skip to main content

"தடை செய்யப்பட்ட சரவெடி உள்ளிட்ட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது"- தமிழ்நாடு அரசு!

Published on 31/10/2021 | Edited on 31/10/2021

 

Prohibited firecrackers should not explode firecrackers, including Saravedi" -  Government of Tamil Nadu!

 

பட்டாசு தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (30/10/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "உச்சநீதிமன்றம் தனது 29/10/2021 ஆம் தேதியிட்ட தீர்ப்பில் 2016, 2017 மற்றும் 2018- ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி, எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளில் போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்த விதமான தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் இரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளைத் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது. 

 

மேற்படி, மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் இரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சரவெடி உள்ளிட்ட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 

மேற்படி, மாண்பமை உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கைமேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்