
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களைக் கலைக்க மாட்டோம் என்று அட்வகேட் ஜெனரல் ஐகோர்ட்டில் உறுதியளித்திருந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களைக் கலைப்போம் என்று அமைச்சர் பெரியசாமி பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தார். இதனால் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கம் சார்பாக வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களைத் திடீரென்று கலைக்கக் கூடாது. மேலும், இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது. எனவே கூட்டுறவு சங்கத்தைக் கலைக்கத் தடை விதிக்க வேண்டும்” என்றார். அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, “கூட்டுறவு சங்கத்தை நாங்கள் கலைக்க மாட்டோம். சில முறைகேடுகள் நடந்த சங்கங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, அட்வகேட் ஜெனரலின் உத்தரவாதத்தைப் பதிவுசெய்துகொண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.