Skip to main content

அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
Unidentified male body


விழுப்புரம் மாவட்டம், உளூந்தூர்பேட்டை அருகே தேன்குணம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டை தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உளூந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுமார் 25ல் இருந்து 30 வயது வரை உள்ள ஆண் சடலம் யார் என்று கிராமத்தினரிடம் விசாரித்துள்ளனர். அடையாளம் தெரியாத காரணத்தினால் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கைப்பற்றப்பட்ட ஆணின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பகலில் ஆண்... இரவில் சுடுகாட்டில் நகை அணிந்து பெண் வேடம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

பெண் வேடத்தில் ஆண் ஒருவரின் சடலம் சுடுகாட்டில் மீட்கப்பட்ட சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கேரள மாநில கண்ணூர் பகுதியில் மூன்று மாதம் முன்னர் வனப்பகுதியில் இருந்து பெண் வேடத்தில் ஆணின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், கேரளா மாநிலத்தில் கண்ணூர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட சூழலி எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் சசி என்று அடையாளம் தெரியவந்துள்ளது. இவருக்கு வயது 45. பகல் முழுவதும் மர வேலை தொடர்பான பணியை  செய்து வந்துள்ளார் சசி. 
 

incident



ஆனால் இரவானதும் பெண்களுக்கான உடை அணிந்து அந்த கிராமப்பகுதியில் வலம் வந்துள்ளார். மட்டுமின்றி பெண்கள் போன்று நகைகள் அணிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.அடுத்த சில வாரங்களில் புடவை அணிந்தவாறு ஆளில்லாத நேரத்தில் பேய்களை போன்று சுடுகாட்டில் வளம் வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். பேய் வேடத்தில் வலம் வர தொடங்கிய பிறகுதான் சுடுகாட்டில் படுத்து உறங்குவதை வழக்கமாக தொடங்கியுள்ளார். விடிந்தவுடன் வழக்கம்போல ஆணாக மாறி தன்னுடைய வேலைக்கு சென்று விடுவார். இவரால் அப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படவில்லை.இவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகே விஷ பாட்டில்கள் இருந்துள்ளன. இதனால் சசி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் விறகு எடுக்க வந்த பெண்களே முதலில் சசியின் சடலத்தை கண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சசியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

selfie

 

Next Story

ஆணுக்கு 300 ; பெண்ணுக்கு 200 ! நூற்றாண்டு விழாவில் விளையாடும் கோடிகள்!

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
300 for males; 200 for a girl! Crows playing at the centenary!


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா 30-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. அரசு விழாவாக இதனை நடத்தும் எடப்பாடி அரசு, விழாவை பிரமாண்டப்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
 

குறிப்பாக, மக்களைத் திரட்டுவதற்காக எடப்பாடி போட்டுள்ள பட்ஜெட்டும் பிரமாண்டமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். 
 

அவர்களிடம் நாம் பேசியபோது, " ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 150 பேருந்துகள், 100 வேன்கள் வரவேண்டும் என அமைச்சர்களிடமும் மா.செ.க்களிடமும் வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி. அதன்படி தமிழகம் முழுவதிலுமிருந்து 4,800 பேருந்துகளும் 3,200 வேன்களும் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. 
 

இவைகள் மூலம் சுமார் மூன்று லட்சம் பேரை விழாவுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விழாவிற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு 300 ரூபாயும், பெண்களுக்கு 200 ரூபாயும் கொடுக்க தீர்மானித்துள்ளனர். 
 

மேலும்,  சாப்பாடு , பிரியாணி மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கித்தரப்பட வேண்டும். இவைகளுக்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட் . இந்த பணம் ,  ஆட்களை திரட்டி வரும் அமைச்சர்கள் அல்லாத மா.செ.க்களுக்கும்  பொறுப்பாளர்களுக்கும்  பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. 
 

ஆனால், நேற்றைய வரையில் ஆட்களைத் திரட்டுவதற்கான தொகை முழுமையாக செலவிடப்படவில்லை. தொகையை பதுக்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இது தவிர வாகன வாடகை, பேனர்கள், இருக்கைகள்,  அலங்காரங்கள், மேடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையிலான செலவினங்களுக்காக 15 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
 

ஆக, 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நூற்றாண்டு விழாவை நடத்துகிறார் எடப்பாடி ! இன்னும் பல நிகழ்வுகளுக்காகவும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழா முடிவில் தான் முழுமையான செலவு விபரங்கள் தெரிய வரும் " என்கிறார்கள்.