கோடை இளவரசியான கொடைக்கானலில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு வட்டகானால் பகுதிக்கு மதுரை ஜெய்ஹிந்து புறத்தை சேர்ந்த 4 நண்பர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.
அந்த நான்கு நபர்களில் மணிகண்டன் என்பவனுக்கு அவனுடைய நண்பன் சீனிவாசன் மனைவிக்கும் கள்ளதொடர்ப்பு இருந்து வந்ததாகவும், இதனை கண்டுபிடித்த சீனிவாசன் பழிவாங்கும் எண்ணத்தில் கூட்டாளிகள் சபரி, மகாராஜன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொடைக்கானலுக்கு மணிகண்டனை அழைத்து வந்து கொலை செய்த பிறகு சடலத்தை அப்புறப்படுத்த உள்ளூர் வாசியான பாம்பார்புரத்தை சேர்ந்த ராஜா என்பவனின் உதவியோடு கொலை அரேங்கேற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் மதுரை ஜெய்ஹிந்துபுறம் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை என குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து கூட்டாளியான சீனிவாசனை விசாரித்தபோது, கொடைக்கானல் வட்டகானால் பகுதியில் மணிகண்டனை கொலை செய்து மூவாயிரம் அடி பள்ளத்தாக்கில் வீசி சென்றதாக தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பள்ளத்தாக்கில் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடியதில் இறுதியாக சடலம் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் சடலத்தை மீட்க முடியாதபடி பாறைகளின் இடுக்கில் சிக்கி இருப்பதாலும், சாரல் மலையினாலும் சடலத்தை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு நடிகை விஸ்னுபிரியாவின் கள்ளகாதலனான டிரைவர் பிரபாகரனை விஸ்னுபிரியாவின் தந்தை சூரிய நாரயணனோ செந்தில்குமார், மணிகண்டன் உள்பட நான்கு கூலிப்படை வைத்து கொலை செய்தார். இதே போல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கள்ளக்காதல் பிரச்சினையால் முஸ்லிம் வாலிபர் ஒருவரை கடத்தி வந்து அமைதி பள்ளதாக்கில் வீசி இருக்கிறார்கள். இப்படி கள்ளக்காதல் பிரச்சினையால் சிலர் கொலை செய்யப்பட்டு வருவதால் கோடை சுற்றுலா தளமான கொடைக்கானல் கொலை நகரமாக மாறிவருகிறது.