கடந்த சில மாதங்களுக்கு முன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீஅபிநவ் பொறுப்பேற்றார். அவர் பொறுபேற்ற சில நாட்களில் சக காவலர்களின் பணிகளை கண்காணித்து அவர்களுக்கு அறிவுரை கூறுதல், பாராட்டு தெரிவித்தல். காவலர்களின் குடும்ப நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவைகளுக்கு, கடலூர் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் காவல்துறையில் சுனக்கமாக பணியாற்றும் சிலருக்கு இதேபோல் நாமும் அனைவர் மத்தியில் பாராட்டும், பரிசும் வாங்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக செயல்பட்டு குண்டர் தடுப்புக் காவலில் எதிரிகளை கைது செய்த, காவல் ஆய்வாளர்கள் புவனகிரி அம்பேத்கார், அண்ணாமலை நகர் தேவேந்திரன் , விருத்தாச்சலம் சாகுல்அமீது ,நெய்வேலி டவுன்ஷிப் ஆறுமுகம், நெய்வேலி தெர்மல் லதா, நெல்லிக்குப்பம் ரமேஷ் பாபு , காடாம்புலியூர் மலர்விழி, விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு சுஜாதா ஆகியோர்களையும், அதேபோல் சிறந்த அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் நகர் ஆய்வாளர் முருகேசன், கடலூர் OT உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, புவனகிரி உதவி ஆய்வாளர் இளஞ்கோவன், நீதிமன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்ட நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் செல்வி ஈஸ்வரி, உதவி ஆய்வாளர் அமலா, கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் விநாயகமுருகன்.
மேலும் மாவட்டத்தில் மெச்சத்தகுந்த பணிபுரிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு ,உதவி ஆய்வாளர் சந்துரு, காவலர்கள் கிருஷ்ணகுமார், முரளி, கனகராஜ் ,சிதம்பரம் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, பண்ருட்டி போக்குவரத்து காவல் பிரிவு காவலர் ராஜதீபன் உள்ளிட்டோர்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் சிறப்பித்துள்ளார். இதனால் காவல்துறையினர் மத்தியில் ஒவ்வொரு மாதமும் இதுநல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.