கஜா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்த தவித்து நிற்கின்றனர். மேலும் பல மாவட்ட மக்களும் கஜாவின் தாண்டவத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் கஜா புயலின் தாக்கம் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார்.
கஜா புயலின் சேதம் குறித்து கேட்டறிந்த பின்னர், மீட்பு நடவடிக்கையில் அனைத்து உதவிகளும் செய்யத்தயார் என்று முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மேலும், கஜா புயலினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் என்றும் தெரிவித்தும், தமிழக பாதுகாப்பாக இருக்க விரும்புவதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.