Published on 24/11/2018 | Edited on 24/11/2018
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான உ.தனியரசு வந்தார். கஜா புயல் பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரியும், தனியரசும் புறப்பட்டு சென்று நம்பியார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இருட்டி விட்டதால் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்திக்கும் திட்டம் ரத்தானது.
பிறகு, பத்திரக்கையாளர்களை சந்தித்த இருவரும், கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும் 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு நிவாரண பணிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், பிரதமரும், தமிழக முதல்வரும் இப்பகுதியை உடனடியாக பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.