குடியரசு தலைவர் வருகையால் இராமேஸ்வரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்க்கு இன்று வருகை தந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மண்டபம் கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானபடை தளத்தில் வந்து இறங்கினார். இவரை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
மண்டபம் விமானபடை தளத்திலிருந்து இராமேஸ்வரத்திற்க்கு காரின் மூலமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மனைவி,மகள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் இராமநாதசுவாமியை தரிசனம் செய்து அங்கிருந்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இவரது வருகையொட்டி இப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என கூறி சிறு வியாபாரிகள் தொழில் கடந்த இரண்டு வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல தடை, சுற்றுலா பயணிகள் இரண்டு நாட்களாக சாமி தரிசனம் செய்ய தடை. கடந்த காலங்களில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இராமேஸ்வரம் வருகைதரும் போது அவர் வந்து போவது யாருக்கும் எந்த சிரமமும் இருக்காது. இவ்வளவுக்கும் அப்துல்கலாம் மாபெரும் மக்கள் தலைவர் அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலைகடலாக திரளும். யாருமே கண்டு கொள்ளாத இப்போதைய ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு கெடுபிடி என்று பொதுமக்கள்,மீனவர் அதிருப்தி தெரிவித்தனர்.
பாலாஜி.