மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது
வழங்கினார் ஜனாதிபதி
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்–வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இன்று ஜனாதிபதி மாளிகையில் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தாண்டுக்கான விருதுகளை வழங்கினார். இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அர்ஜூனா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அர்ஜூனா விருதுடன் ரூ.5 லட்சமும் ரொக்கப் பரிசாகவும் வழங்கப்பட்டது.