பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்
சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார்.