தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகளைக் காலவரையின்றி ஒத்திவைப்பதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆயிரத்துக்கும் கீழாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 13 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதே எண்ணிக்கையில் சென்றால் விரைவில் பெரிய அளவிலான தொற்று பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரி இறுதியில் பாதிப்பு உச்சநிலையில் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.