2024-ன் ‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழா ஜூன் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜுன் 29, ஜூன் 30 என மொத்தம் மீன்று நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு 22ஆம் ஆண்டாக இந்த விழா நடைபெறவுள்ள நிலையில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதில் 7 திரைப்படங்கள், 12 குறும்படங்கள், 1 ஆவண வெப் தொடர் உள்ளிட்டவை அடங்கும்.
அதில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படம் திரையிடப்படவுள்ளது. இறுதி நாளான 30ஆம் தேதி இப்படம் திரையிடப்படவுள்ளது. மேலும் டர்செம் சிங் இயக்கிய ‘டியர் ஜெஸ்ஸி’, நிகில் நாகேஷ் இயக்கிய ‘கில்’, சுச்சி தலதி இயக்கிய ‘கேர்ள் வில்பி கேர்ள்ஸ்’ ஆகிய இந்தியப் படங்கள் திரையிடப்படவுள்ளன. இதில் ‘டியர் ஜெஸ்ஸி’ படம் இந்தியா, கனடா, அமெரிக்காவின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. முதல் நால் விழாவில் இப்படம் திரையிட்பபடவுள்ளது.
சர்வதேச விழாவான இதில், விஜய் சேதுபதியின் மகராஜா படம் திரையிடப்படவுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.