Published on 29/09/2018 | Edited on 29/09/2018

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,
வளிமண்டல மேலடுக்கில் இலங்கை முதல் வடக்கு கர்நாடகம் வரை சுழற்சி நிலவுவதால் இன்னும் 24 மணி நேரத்தில் தென் தமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும். வங்கக்கடலில் சீற்றம் நிலவுவதால் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவே நாளை (செப்டெம்பர் 30) மாலை வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம். வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டை விட 12 சதவிகிதம் கூடுத்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.