Skip to main content

புதுவை ரவுடி விழுப்புரம் எல்லையில் படுகொலை...

Published on 29/08/2020 | Edited on 31/08/2020

 

vvv

 

புதுச்சேரி கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால்தாஸ் (48). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி. இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி ஜெயந்தி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இரண்டாவது மனைவி ஜெயந்தி தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள பூந்துறை பகுதியில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். ஜெயந்தி தற்போது மஸ்கட் நாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தனியாக வசித்து வரும் தனது மகள்களை பார்ப்பதற்காக கோபால்தாஸ் பூந்துறை பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். 

 

அதன்படி நேற்று முன் தினம் இரவு தனது மகள்களைப் பார்ப்பதற்காக பூந்துறை பகுதிக்கு கோபால்தாஸ் வந்துள்ளார். அன்று இரவு மகள்களுடன் சாப்பிட்டுவிட்டு வீட்டு வாசலில் படுத்திருந்துள்ளார். நள்ளிரவு ஒரு மணியளவில் 4 டூவீலர்களில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியும் தலையில் கல்லை தூக்கிபோட்டும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கோபால்தாஸ் அலறித் துடித்து உயிரிழந்துள்ளார். சில நிமிடங்களில் இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் கொலை நடந்தபோது கோபால்தாஸ் போட்ட சத்தம் சரியாக யாருக்கும் கேட்கவில்லை.

 

மீண்டும் அவரது அலறல் சத்தம் அதிகமாக கேட்கவே, வீட்டுக்குள் இருந்த கோபால் தாஸ் மகள்கள் இருவரும் வெளியே ஓடிவந்து பார்த்தனர். தனது தந்தை தலை சிதைந்த நிலைகள் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதை பார்த்துக் கதறி அழுதனர். இதுகுறித்த தகவல் வானூர் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவலறிந்து கோட்டகுப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கம் சம்பவ இடத்திற்கு வந்து மோகன்தாஸ் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். உடனடியாக தடய அறிவியல் துறையினர் மற்றும் போலீஸின் மோப்பநாய் ராஜி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு வரை ஓடிச் சென்று நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை.

 

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த வானூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். அவர்களது விசாரணையில் கொலை செய்யப்பட்ட கோபால்தாஸ் மீது புதுச்சேரி மாநிலத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டப்பக்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மாயவன் என்பவரை கோபால்தாஸ் வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும், இந்தக் கொலை வழக்கில் மோகன்தாஸ் முதல் குற்றவாளியென போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தற்போது கோபால்தாஸ் கொலையில் முக்கிய குற்றவாளியான கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அய்யப்பன் விக்னேஷ் வசந்தகுமார் நவீன் அரியாங்குப்பம் வினோத் குமார் ஆகிய 6 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது சஞ்சய் என் தாய்மாமன் தான். கூட்டப்பாக்கத்தைச் சேர்ந்த மாயவன் அவரை கடந்த 2012ஆம் ஆண்டு கொலை செய்தார். இதற்கு காரணம் கோபால்தாசுக்கும் மாயவன் மனைவிக்கும் இருந்த தகாத உறவு. அப்போதே மாயவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மாயவனின் மனைவியும் கோபால்தாசும் சேர்ந்து, என் தாய்மாமனை கொலை செய்தனர். அதற்குப் பழிக்கு பழிவாங்கவே தற்போது கோபால்தாஸ் கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டதாகவும் சஞ்சை வாக்குமூலம் அளித்துள்ளார். கோபால்தாஸ் அடிக்கடி பூந்துறை பகுதிக்கு உங்கள் மகளைப் பார்ப்பதற்காக வந்து செல்வதை அறிந்து, தனது ஆதரவாளர்களுடன் கோபால்தாசை கண்காணித்து இக்கொலையை அரங்கேற்றியதாக சஞ்சய் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து கொலையாளிகள் 6 பேரையும் வானூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். மோகன்தாஸ் கொலை சம்பவம் விழுப்புரம் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்