![](http://image.nakkheeran.in/cdn/farfuture/73nhRjkVPTauiZlRB70OoZzjZTRPC9Gta8lcW1c-_t0/1533347670/sites/default/files/inline-images/pon%20radhakrishnan%20600.jpg)
கலைஞர் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது ஆளும்கட்சியினர் அவர் என்ன பேச போகிறார் என அஞ்சினர் ஆனால் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வந்தாலும், அவர் வந்ததும் போய்விடுவார் என்று ஆளும் கட்சியினருக்கு நம்பிக்கை வந்துள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கூறுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்கவேண்டியதில்லை. நான் தமிழகத்தில் தான் இருக்கிறேன். முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகளும் இது குறித்து பேசியுள்ளனர். தமிழகத்தில் பயங்கர வாதிகளை ஒடுக்க மாநில அரசு கேட்டுக்கொண்டால் மத்திய அரசு உதவும். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை கூட மாநில அரசு கைது செய்யவில்லை. மத்திய அரசின் துறைகள் தான் கைது செய்துள்ளன.
அரசு செய்யும் தவறுகளை தி.மு.க. சட்டசபையில் பேசுவதில்லை. கருணாநிதி எதிர்கட்சி தலைவராக 5 முறை இருந்துள்ளார். அப்போது ஆளும்கட்சியினர் அவர் என்ன பேச போகிறார் என்று அஞ்சியிருந்தனர். ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வந்தாலும், அவர் வந்ததும் போய்விடுவார் என்று ஆளும் கட்சியினருக்கு நம்பிக்கை வந்துள்ளது. ஆளும் கட்சியை கேள்வி கேட்க வேண்டிய பிரதான எதிர்கட்சியான தி.மு.க. இந்த நிலைக்கு தாழ்ந்து விட்டது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.