பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், எந்த அனுமதியும் பெறாமல் சொகுசு விடுதிகள் இருப்பதையும், அங்கே கெட்ட காரியங்கள் அதிகம் நடப்பதையும் பற்றியும் எழுதியிருந்தோம். அதுபற்றி விசாரிக்க கலெக்டரால் அனுப்பப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ரவீந்திரன், அந்தப் பகுதியில் மொத்தம் 63 விடுதிகள் இருப்பதைக் கண்டு பிடித்ததையும் சுட்டிக் காட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த விடுதிகளின் உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடியிடமே, "எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், விடுதி கேமராக்களில் பதிவான பலான வீடியோக்களை வெளியிடுவோம். குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரங்கள் தொடர்பான புதிய வீடியோக்கள் வெளிவரும்'ன்னு அவர்கள் எச்சரிச்சதையும் விவரித்திருந்தோம்.
இந்த செய்தி நக்கீரன் மூலம் அம்பலமானதால் எடப்பாடி அரசு பதட்டமாயிடிச்சி. இந்த செய்திகள் எல்லாம் எப்படி நக்கீரனுக்குப் போனதுன்னு ஒருபக்கம் அதிகாரிகளைத் துருவுவதோடு, நாம் நேர்மையானவங்கன்னு காட்ட, ஏதேனும் ஒருசில விடுதிகள் மீதாவது நடவடிக்கை எடுங்கன்னு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கு எடப்பாடி அரசு. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி அருகிலுள்ள வாளையாறில் இருக்கும் ’ வெஸ்டர்ன் வேலி ரிசார்ட்டை’ சோதனையிட்ட அதிகாரிகள், அதுக்கு சீல் வச்சிருக்காங்க. இதனால் இன்னும் பொள்ளாச்சி விவகாரத்தில் எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.