Skip to main content

பொள்ளாச்சி கொடூரர்களுக்கு சலுகை... 7 போலீசார் சஸ்பெண்ட்!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

pollachi incident... 7 police suspended!

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே இவ்வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கிறார்கள். இந்தப் வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது.

 

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சாலையோரம் நின்ற உறவினர்களை சந்திக்க காவல்துறை அனுமதியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின் 9 பேரும் சேலம் மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். அப்பொழுது கோவை விமான நிலையம் அருகே சென்றபோது காவல் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதாகவும் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரை அவரது உறவினர்கள் சாலையோரத்தில் நின்று ரகசியமாக சந்திக்க காவல்துறையினர் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் உறவினர்களை சந்திக்க வேண்டுமென்றால் முறையாக நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்கின்ற விதிமுறை இருக்கும் நிலையில், இப்படி ரகசியமாக சாலையில் சந்திக்க வைக்கப்பட்டது ஏன்?  அதற்கு காவல்துறை அனுமதி அளித்தது ஏன் என சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. 

 

இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் காவல் ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்களை உறவினரிடம் பேச அனுமதியளித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் என 7 பேரையும் சஸ்பெண்ட் செய்துள்ளார் சேலம் காவல் ஆணையர் நஜ்மல்.

 

 

சார்ந்த செய்திகள்