கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்திற்கு வந்தனர். ஊராட்சி தலைவர்களின் கோரிக்கைகளை, பரிசீலனைகளைக் கூட செய்ய ஒன்றிய நிர்வாகம் மறுத்து வருவதைக் கண்டித்து கூட்டத்தில் பங்கேற்காமல் குமராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஒட்டுமொத்த தலைவர்களும் வெளிநடப்பு செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சியில் வர உள்ள பணிகளில் 25 சதவீதம் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பணி கொடுக்க வேண்டும். ஊராட்சித் தலைவர்களின் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதையும், பல்வேறு கோரிக்கைகளை ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்ததாக தலைவர்கள் கூறுகிறார்கள்.
கூட்டமைப்பு கௌரவதலைவர் பாபுராஜ், செயலாளர் பால.அறவழி, பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.