ஆசிரியர்கள் தினம் மூலம் பல ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதும் வாங்கி இருக்கிறார்கள். அது போல் கல்வி கற்று கொடுத்த குருவான ஆசிரியர்கள் காலிலும் மாணவ, மாணவிகள் விழுந்து வணங்கினார்கள். இதில் ஒரு படி மேலே போய் சேலம் கலெக்டர் நந்தினி ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இப்படி ஆசிரியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்து வந்த நேரத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் சீட்டு விளையாடுவதும் தூக்குவதுமாக வாட்சப் மூலம் படங்கள் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நாம் விசாரணையில் இறங்கினோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ளது இடைய கோட்டை. இந்த இடையகோட்டை மாவட்டத்தின் கடைசியாகவும் கரூர் மாவட்டத்தின் எல்லையிலும் உள்ளது. இப்படிப் பட்ட இடைய கோட்டையில் தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அது போல் பதினைந்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்.
இப்படி செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லி தருகிறார்களோ இல்லையோ கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை.
இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாணவனை ஆசிரியர் காதை திருகுவது போல் சில்மிஷம் செய்து இருக்கிறார். இந்த விஷயம் வெளியே தெரிந்ததின் பேரில் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து விட்டனர். இந்த நிலையில் தான் தற்பொழுது அதே அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசியர்கள் தங்களுக்கு ஒதுக்குபட்ட ஒய்வு அறையில் உட்கார்ந்து சீட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அதுபோல் சேர், டேபிள்களிலும் படுத்து தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி ஆசிரியர்கள் சீட்டு விளையாடுவதும் தூங்குவதுமாக இருக்கும் படங்கள் தான் தற்பொழுது வாட்சப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் செயல் பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிய வரவே பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என புகார் தெரிவித்தனர்.
இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருப்பதால், அந்த பெற்றோர்கள் ஆசிரியர்களைப் பற்றி எந்த புகாரும் தெரிவிப்பதில்லையாம்.
எங்களுக்கு வசதி இல்லாததால்தான் அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். இதுபோன்று ஆசிரியர்கள் இருந்தால் எப்படி எங்கள் பிள்ளைகள் படிப்பார்கள். அரசுப் பள்ளியில் சம்பளம் 50 ஆயிரம் வாங்கும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை வருடத்திற்கு ஒரு லட்சம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். விவசாயிகளாவும், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் என்ன செய்வோம். இந்தப் பள்ளியில்தான் சேர்ப்போம். எங்களுக்கு வேறு வழியில்லை. நல்லவற்றை கற்றுத்தரும் ஆசிரியர்களே, பள்ளியில் சீட்டு கட்டு ஆடுவதும், தூங்குவதும், கால்களை மஜாஜ் செய்ய சொல்வதுமாக இருந்தால், மாணவர்களின் நிலை என்னவாகும். நாங்கள் வசதியில்லாதவர்கள்தான் இருந்தாலும் நாங்கள் கூட எங்க வீட்டில் இப்படி எங்க பிள்ளைகளை வேலை வாங்கியது இல்லை என்றனர் பெற்றோர்கள்.