சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காஜாமொய்தீன், ஜபர் அலி, அப்துல் சமது ஆகியோர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டெல்லியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளுமேட்டில் உள்ள காஜாமொய்தீனின் 3 வது மனைவி பத்துருண்ணிஸா, நெய்வேலி 7 வது வட்டத்தில் உள்ள முதல் மனைவி இந்திரா மற்றும் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தில் ஜபர் அலி வீடு, பரங்கிப்பேட்டை அப்துல்சமது வீடு ஆகிய 4 இடங்களில் திங்கள் அதிகாலையில் இருந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள்(என்ஐஏ) சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 4 இடங்களிலும் 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பரங்கிப்பேட்டையில் உள்ள அப்துல் சமது வீட்டில் ஆய்வாளர் அமினேஸ்வரி தலைமையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்ட பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.