Skip to main content

கறுப்புக்கொடி காட்ட வரும் வைகோ அவர்களை பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் வரவேற்கிறோம்... பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

 

vaiko bjp

 

இன்று பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வருகிறார். இதை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கறுப்புக்கொடி, கறுப்பு பலூன் என போராட்டங்கள் பலவிதங்களில் நடைபெற்று வருகிறது. ட்விட்டரிலும் கோ பேக் மோடி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. 
 

இந்நிலையில் மதுரையில் இன்று போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பா.ஜ.க. இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில்,
 

“நாளை கறுப்புக்கொடி காட்ட வரும் வைகோ அவர்களை பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக வரவேற்கிறோம். உங்களை வரவேற்று வழியனுப்ப வழி மீது விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது."  என அச்சிடப்பட்டிருந்தது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்