Skip to main content

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் போலீஸ் அதிரடி நடவடிக்கை...

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

birthday celebration

 

 

விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனம் அருகில்  பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் சுரேஷ் வயது 21, இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இவரது பிறந்தநாளை சக நண்பர்களுடன் நட்ட நடு சாலையில் கேக்கை வைத்து பட்டாக்கத்தியால் அதை நண்பர்கள் புடை சூழ வெட்டி கொண்டாடியுள்ளார் சுரேஷ்.

 

இதை அவர் உடன் இருந்த நண்பர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ செய்து தங்களது வீரத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பட்டாக்கத்தி கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. இந்த நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் வரை சென்று உள்ளதை அடுத்து அவரது உத்தரவின் பேரில் பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் சீனி பாபு, உதவி ஆய்வாளர்கள் முருகன் சசிகுமார் ஆகியோர் பட்டாக்கத்தி பார்ட்டிகளையும் அதில் கலந்துகொண்டு வீடியோ எடுத்து வெளியிட்ட சுரேஷ் நண்பர்களையும் தேடி சென்று சுற்றி வளைத்தனர்.

 

அதில் சுரேஷ் அவரது நண்பர் விஜயராகவன் ராமானுஜம் ஆகியோர் மட்டும் போலீசிடம் சிக்கி கொண்டனர். அவர்கள் சுரேஷ் உடனிருந்து பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டி கொண்டாடியதை ஒப்புக் கொண்டனர். சுரேஷ் விஜயரங்கன் ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சுரேஷின் நண்பரான தலைமறைவாக உள்ள ராமானுஜம் உட்பட அவரது நண்பர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்