திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நூற்றி மூன்று கிராமங்கள் உள்ளன. 103 கிராமத்திற்கு 3 காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் மட்டும் 103 கிராமத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. சுமார் 47 அதிகாரிகள் காவலர்களை கொண்டு இந்த காவல் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது.
அதிகாரிகள் இரவு நேரத்தில் ஒரு பக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது மறுபுறத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்த பகுதியில் நடக்கும் திருட்டு கொள்ளை சம்பவங்களை உடனடியாக தடுக்க வேண்டும் என்று சொன்னால் அதிகபடியான அதிகாரிகளை காவலர்களை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
அதிக அளவில் காவலர்களை நியமனம் செய்தால் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைக்கப்படும். ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் காவலர்களை வைத்துக்கொண்டு 103 கிராமங்களையும் பாதுகாத்து வருகிறார்கள். மேலும் பல அதிகாரிகளையும் காவலர்களையும் நியமனம் செய்தால் மணல் கொள்ளை, மதுவிற்பனை, குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனவே மாவட்ட கண்காணிப்பாளர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் மீது அக்கறை கொண்டு திறமையான அதிகாரிகளையும் காவலர்களையும் நியமனம் செய்ய வேண்டுமாறும், வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இந்தப் பகுதி மக்களின் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.