Skip to main content

பேருந்தில் குழந்தைக்கு பால் புகட்டிய பெண்ணிடம் சீண்டல் - காவலருக்கு தர்ம அடி

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Police slapped; at woman who fed baby milk on bus

 

பேருந்தில் குழந்தைக்கு பால் புகட்டியபடி சென்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு தர்ம அடி வாங்கிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

இடுக்கி மாவட்டம் பெருவந்தனம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஜாஸ் மோன். கடந்த சனிக்கிழமை கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து முண்டகாயம் செல்லும் பேருந்து ஒன்றில் காவலர் அஜாஸ் மோன் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் முன் இருக்கையில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். பேருந்து பொன்குன்னம் என்ற  நிறுத்தத்தில் நின்றதும் அந்த பெண் குழந்தையுடன் இறங்கிக் கொண்டார். அங்கிருந்து வேறு பேருந்தில் பெண் ஏறினார். ஆனாலும் விடாத அந்த காவலர் அந்த பெண் ஏறிய மாற்று பேருந்திலும் ஏறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அப்பெண் உடனடியாக கணவர் மற்றும் அவரது உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். உடனடியாக கஞ்சிரப்பள்ளி என்ற பகுதியில் பெண்ணின் உறவினர்கள் பேருந்தை மறித்தனர். அவரிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் அஜால் மோனுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்