ராமநாதபுரத்தில் 300 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும், கடல்பசு, கடல்குதிரை, கடல் அட்டை, டால்பின் உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், வடக்கு மண்டபம் கடற்கரை பகுதியில், தடை செய்யப்பட்ட கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக கடலோர பாதுகாப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்திய அவர்கள் ஆசிக் அலி என்பவர் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். ஆசிக் அலியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.