தமிழகத்தில் தற்போது இரண்டாம் நம்பர் விற்பனை தான் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. அதிலும், மணல் கொள்ளையும், லாட்டரி விற்பனையும் போலிசுக்கு தெரிந்தே விற்பனை செய்ய வைக்கிறது.
திருச்சியில் போலிஸ் கமிஷனராக அருண் இருக்கும் போது திருச்சி மாநகரில் விற்பனை செய்த லாட்டரி கும்பல் 50 பேருக்கு மேல் பிடித்து சிறையில் அடைத்து குண்டாஸ் வரை வழக்கு பதிவு செய்தால் மாநகரில் இருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டும் புறநகர் மணப்பாறை பகுதியில் மிகப்பெரிய அளவில் சுறுசுறுப்பாக விற்பனை செய்து வருகிறார். இதற்கு போலிசின் முழு ஒத்துழைப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் மணப்பாறையில் விற்பனை செய்யும் மொத்த லாட்டரி வியாபாரியிடம் லாட்டரி சீட்டு விற்னை செய்த பணத்தை வசூல் செய்த மொத்தவியாரிகளின் ஏஜெண்ட் மணப்பாறையிலிருந்து திருச்சிக்கு பஸ் ஏறி வருகிறார்.
பஸ் மரவனூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது தீடீர் என ஓரு கார் வேகமாக வந்து மறித்து பஸ் கண்டெக்டரிடம் நாங்க போலிஸ், இந்த பஸ்லில் கள்ளலாட்டரி விற்பனை செய்யும் ஏஜெண்ட் இங்க பணத்தோடு இருக்கான்னு தகவல் வந்திருக்கு அவனை திருட்டு வழக்கு சம்மந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கீழே இறக்கி கொஞ்ச தூரம் அழைத்து சென்று இருக்கிற பணத்தை எல்லாம் புடிங்கி கொண்டு அடித்து துரத்தியிருக்கிறார்கள். கள்ளலாட்டரி பணம் என்பதால் பாதிக்கப்பட்டவனும் வெளியே சொல்லாமல் அப்படியே அமைதியாகி விட்டார்.
இதே போல மணப்பாறை நகரில் லாட்டரி விற்பனை செய்யும் வியாபாரி டிபிஎஸ் கடந்த 25ம் தேதி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்களை போலிஸ் என்று சொல்லிக்கொண்டு உள்ளே இருந்த 10 இலட்சம் பணத்தையும், 10 பவுன் நகையையும் வலுகட்டாயமாக எடுத்து சென்று விட்டனர். இது குறித்து போலிசுக்கும் தகவல் சொல்லவில்லை.
ஒரு வழியாக பாதிக்கப்பட்ட நபர் போலிசுக்கு தகவல் சொல்ல நினைக்கும் போது போலிசும் – பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் பஞ்சாயத்தில் இந்த பிரச்சனை வெளியே தெரிய வேண்டாம் என்று மறைத்து விட்டார்களாம்.
மணப்பாறை பகுதியை சுற்றி கிராமங்களில் சுற்றி உதாரணமாக காட்டுபட்டி சீட்டு கிளப், , கோவில்பட்டி கிளப், என கிராமங்கள் தோறும் இந்த கிளப் அதிகப்படுத்தியும் அதற்கு மாதம் இவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்து வசூல் செய்வதால் உளவு பிரிவும் இதை பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல தவிர்த்து வருகிறார்களாம்.
ஆனால் லாட்டரி பிரச்சனையில் அடுத்தடுத்து சட்டவிரோத லாட்டரி கும்பலிடம் போலிஸ் போல் நடித்து பணம் பறித்த கும்பல் யார் என்று ஒர்ஜினல் போலிசுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மறைத்து .