Skip to main content

மனைவியைப் பற்றி அவதூறுபேச்சு.. ஸ்டேஷனிலேயே கட்டி புரண்டு சண்டையிட்ட ஏட்டையா- ராணுவ வீரர்...!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

தன்னுடைய மனைவியை, தன் கண் முன்னே போலீஸ் ஏட்டையா ஒருவர் அவதூறாக பேச, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலேயே அவருடன் கட்டிப் புரண்டு, அவரை அடித்து சட்டையை கிழித்ததால் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக ரிமாண்டிற்கு சென்றுள்ளார் மாஜி ராணுவ வீரர் ஒருவர்.

 

vk puram

   
கடந்த டிசம்பர் மாதத்தில் ராணுவத்தில் ஓய்வு பெற்ற என்னுடைய கணவர் சங்கர் ராஜா (38) சமீபகாலமாக தன்னை சித்ரவதைப்படுத்துகிறார் என நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஜெயசுபா. சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து, இனிமேல் இப்படி நடக்ககூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரியும், எஸ்.ஐ.சுரேஷ்குமாரும். தம்பதிகள் இருவரும் மனம் ஒற்றுமையாக காவல் நிலையத்தினை விட்டு வெளியேறிய வேளையில், தான் கொண்டு வந்து மொபைல் போனை ஸ்டேஷனிலேயே விட்டுவந்தது நினைவுக்கு வர, மறுபடியும் ஸ்டேஷனுக்கு சென்றிருக்கின்றார் மாஜி ராணுவவீரர். அவர் சென்ற வேளையில் அங்கிருந்த ஏட்டையா வின்செண்ட் என்பவர், "பெண்டாட்டியை விட்டுட்டு ஊருக்குப் போயிடுவானுக, திரும்ப வந்ததும் அனுப்பிய பணத்துக்கு கணக்கு கேட்குறானுக, இதுவே இவனுகளுக்கு பொழப்பா போச்சு.." என்ற ரீதியில் மற்றொரு போலீஸாருடன் அவதூறாகப் பேசிக் கொண்டிருக்க, "எம் பெண்டாட்டியைப் பற்றி தப்பா பேசுறீயாலே..." என ஒருமையில் தலைமைக்காவலரை திட்டி அங்கேயே பல போலீஸார் முன்னிலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் ஏட்டையாவும், முன்னாள் ராணுவவீரரும்.

 

உடலெங்கும் காயம் ஏற்பட்ட ஏட்டையா வின்செண்ட் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட, அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார் ராணுவ வீரர். இது ஒரு தலைப்பட்சமான முடிவு என்று கூறி  தற்பொழுது ஏட்டையா வின்செண்டிற்கு எதிராக மாவட்ட எஸ்.பி.முதல் டி.ஜி.பி.வரை அனைவருக்கும் புகாரை அனுப்பி வருகின்றனர் ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர்கள். இதனால் மாவட்டத்தில் போலீஸ் வட்டாரத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்