இரண்டாம் நிலை காவலர் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறாத நபரை இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல்துறை, சிறைதுறை தீயணைப்பு துறை ஆகியவற்றில் காலியாகவுள்ள 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 3 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். எழுத்து தேர்வு, உடல் கூறு தேர்வு ஆகியவை நிறைவடைந்து, அதற்கான இறுதி முடிவு 4.2.2020 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தமிழகத்தில் 8789 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவில் முறைகேடு நடைபெற்றுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்து தேர்வில் வெற்றி பெறாதா கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் 0904808 என்ற எண் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற 8789 பேரில், வேலூரில் இருந்து அதிகபட்சமாக 1119 தேர்ச்சி பெற்றிருப்பதும், தேர்ச்சி பெற்றவர்களின் நம்பர் ஒன்றன் பின் ஒன்றாக இருப்பதும் தான் சரச்சையாக உருவெடுத்துள்ளது. இதில் அரசு பணியாளர் தேவராஜ் பாண்டியனுக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. இதே போல் எஸ்ஜ தேர்வில் வேலூர் சிகரம் கோச்சிங் செண்டரில் நடைபெற்ற முறைகேடை நக்கீரன் ஆதாரத்தோடு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.