









Published on 22/04/2021 | Edited on 22/04/2021
சென்னை பெருநகர வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் அருகில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் காவல் ஆய்வாளர்கள், காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார்.