Published on 13/02/2020 | Edited on 13/02/2020
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
![police case on seeman](http://image.nakkheeran.in/cdn/farfuture/kQdwWhsb9ZUx9Pebc6Q3TO7Vge7_Ao6-t5cXNdq48TU/1581561629/sites/default/files/inline-images/tyututy.jpg)
2.10.2018 ஆம் ஆண்டு கிண்டியில் நடைபெற்ற காமராஜர் நினைவுநாள் விழாவின் பிறகு, காமராஜர் நினைவு மண்டபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார் சீமான். அதில் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.