திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி.சாலையில் உள்ளவர் சோமசுந்தரம் என்கிற வணக்கம் சோமு. இவர் முன்னாள் மலைக்கோட்டை பகுதியின் அதிமுக பொருளாளர் . இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறர்.
இந்த நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் மகாலட்சுமி என்பவரை ஒருதலையாக காதலித்துள்ளார் திருமணத்திற்கு அவர் மறுக்கவே அவரை கட்டாயமாக கடத்தி திருமணம் செய்ய வணக்கம் சோமு முடிவெடுத்து இதற்காக கடந்த 30 ஆம் தேதி தோழி ஹேமாவுடன் பேராசிரியை மகாலட்சுமி நடந்து சென்ற போது சோமு தனது கார் டிரைவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் வேனில் பேராசிரியரை கடத்தினார் .
திருச்சி மதுரை சாலையில் உள்ள துவரங்குறிச்சி அருகே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மகாலட்சுமியை இறக்கிவிட்டு வணக்கம் சோமு மற்றும் அவர் நண்பர்கள் தப்பினர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் நாஞ்சிக்கோட்டை சார்ந்த அலெக்ஸ் மற்றும் தஞ்சையைச் சார்ந்த மரிய பிரகாஷ் மற்றும் கார் டிரைவர் கீழே கல்கண்டார் கோட்டையை சார்ந்த விக்னேஷ் ஆகியோரை கைது செய்து கைதான மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வணக்கம் சோமு போலீஸ் கையில் கிடைக்காமல் டிமிக்கி கொடுத்து கடந்த 20 நாட்களாக தலைமறைவாக உள்ளார். மேலும் தலைமறைவாக வணக்கம் சோமு மற்றும் அவர் நண்பர் ஜெயபால் மற்றும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். மதுரை குற்றாலம் சென்னை கேரளா திருப்பதி என போலீஸ் போக்கு காட்டிய போலீசார் பிடிக்காமல் தண்ணி காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது திருச்சி பகுதியிலேயே டூவீலரில் வலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே பேராசிரியை மகாலட்சுமியை காரில் கடத்தி சென்றவர்கள் மூன்று பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தன்னை கடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டும் வகையில் 19.10.2019 அன்று திருச்சி சிறைச்சாலையில் அணிவகுப்பு நடைபெற்றது. கைதிகள் பலரும் வரிசையாக நிற்க வைத்தனர். இதில் தன்னை கடத்தியவர்கள் யார் என பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் சிறைக்குச் சென்று பேராசிரியர் அடையாளம் காட்டினார்.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய் மனுவை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதே நேரத்தில் திருச்சியில் லலிதா ஜீவல்லரி நகைக்கொள்ளை வழக்கு கோட்டை காவல்நிலைய எல்லைக்குள் நடைபெற்றதால் போலீசார் அனைவரும் இந்த கொள்ளை வழக்கிலே ரொம்ப பிஸியாக இருப்பதால் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வணக்கம் சோமு தலைமறைவாக இருந்தவர் தற்போது திருச்சி சத்திரம் கடைவீதிகளில் டூவிலரில் சுற்றிக்கொண்டிருக்கிறார். இதை லோக்கல் போலீசும் கண்டுக்காமல் இருக்கிறார்களாம்.