தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 144 தடை பிறப்பிக்கபட்டுள்ளதால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக 3000 மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இடைவெளியின்றி பணியாற்றடி வருவதால் பல போலீசார்கள் மனஉளைச்சல் மட்டும் உடல் அலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரில் மதுரை ஆயுதப்படையை சேர்ந்த பார்த்திபன் என்ற காவலர் பணிச்சுமை தாங்கமுடியாமல் பணிவிடுப்பு கேட்டுள்ளார் உயரதிகாரிகள் விடுப்பு வழங்க மறுத்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தற்போது அவர் காப்பற்றப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ப்பட்டுள்ளார். இன்னும் வீட்டிற்குக்கூட தகவல் தெரிவிக்காமல் போலீசார் இந்த விஷயத்தை மறைத்து வருகின்றனர். இதேபோல் தூத்துக்குடியில் வெளிமாவட்டத்திலிருந்து குவிக்கப்பட்டுள்ள பல போலீசார்கள் மனஉளைச்சலுக்கும், பணிசுமைக்கும் ஆளாகியுள்ளததாகவும் கூறப்படுகிறது.