Skip to main content

பிளஸ் டூ துணைத்தேர்விற்கு சிறப்பு அனுமதித்திட்டத்தின் மூலம் (தட்கல்) விண்ணப்பிக்க 9ந்தேதி கடைசி நாள்

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
பிளஸ் டூ துணைத்தேர்விற்கு சிறப்பு அனுமதித்திட்டத்தின் மூலம் (தட்கல்)
விண்ணப்பிக்க 9ந்தேதி கடைசி நாள்

புதுக்கோட்டை, செப்,9- செப்டம்பர், அக்டோபர் 2017-ல் நடைபெற உள்ள பிளஸ் டூ துணைத்தேர்விற்கு சிறப்பு அனுமதித்திட்டத்தின்மூலம் (தட்கல்) விண்ணப்பிக்க இன்று 9ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாள் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.செந்திவேல்முருகன் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

செப்டம்பர், அக்டோபர் 2017-ல் நடைபெற உள்ள பிளஸ்டூ துணைத்தேர்விற்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல் தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதித்திட்டத்தின் மூலம் (தட்கல்) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் விண்ணப்பிக்க இன்று 9ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இந்த முறையில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பெண்தனித்தேர்வர்கள் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை அரசு இராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தகுதியான ஆண்தனித்தேர்வர்கள் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தகுதியான ஆண்பெண் தனித்தேர்வர்கள் இருபாலரும் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆன்லைன் மூலம் (இணையதளம்) இன்று 9ந்தேதி(சனிக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார். 

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்