பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால் விலை நிச்சயம் குறையும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால் விலை நிச்சயம் குறையும். ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் கொண்டுவரப்பட்டதால் மாநில அரசின் வருவாய் அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியுடன் சேர்ப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அரசின் வரி வருவாய் பெரிதும் பாதிக்கும். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வாட்வரி குறைக்கப்படாது. வரி வருவாயை இழக்க மாநில அரசு தயாராக இல்லை என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.