சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயைத் தொட்டுள்ளது. பெட்ரோல் விலையுயர்வால் மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம் குறித்த அச்ச உணர்வு அதுவும், இந்தக் கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளது என்றும் கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் தமிழ் பாடல் வரிகள் மாற்றப்பட்டு, பெட்ரோல் விலையேற்றம் குறித்து மீம்ஸுகளாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து ட்வீட்ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்: 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு, வைரமுத்து எழுதிய மேலும் சில பாடல்களைப் பெட்ரோல் விலையுடன் ஒப்பிட்டு பாடல் வரிகளை மாற்றி எழுதி ரசிகர்கள் பெட்ரோல் விலையேற்ற வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
அவற்றில் சில...
'சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே கொள்ளையனடி'
'உசுரே போகுது உசுரே போகுது
பெட்ரோல் விலைய பார்க்கையிலே...'
'ஒரு பொய்யாவதுசொல்கண்ணே
பெட்ரோல் விலை குறையும் என்று...’