Skip to main content

பொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்.பி. மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...!

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட விவகாரத்தில் கோவை எஸ்.பி. மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஏ.கே.சூரியபிராகசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

 

high court

 

ஏற்கனவே இது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் முறையிட்டிருந்தும் சரியான நடவடிக்கை எடுக்காததனால் நீதிமன்றம் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீதும், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைந்து அரசாணை வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மீதும் ஏற்கனவே டி.ஜி.பி.யிடம் புகார் அளித்திருந்தும் அந்த புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்காததனால். தற்போது நீதிமன்றம் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை அன்று விசாரணைக்கு வருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தின் மௌன அலறல் ஓயவில்லை!" - கமல் ட்வீட்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

pollachi issue Kamal tweets!

 

பொள்ளாச்சி பாலிய வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க. கட்சியின் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான பைக் பாபு, ஹேரென் பால் உள்ளிட்ட மூவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

 

அதைத் தொடர்ந்து மூன்று பேரும், கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் ஜனவரி 20-ஆம் தேதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இதனிடையே, இந்த வழக்கில் மேலும் இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மூன்று பேரைக் கைது செய்ததாகவும் சி.பி.ஐ.யின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அருளானந்தத்தை நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகிய இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

 

அரசியல் கட்சியினர் பலரும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது'' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

பொள்ளாச்சியை போல மயிலாடுதுறையில் மாணவிக்கு நடந்த சோகம்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

பள்ளி மாணவியை காதலிப்பது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவும் எடுத்து தங்களின் இச்சைக்கு அடுத்தடுத்து இணங்க வேண்டுமென சித்திரவதை செய்த இருவர் போக்சோ சட்டத்தில் கைதாகி இருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

 The tragedy of a student in Mayiladuthurai like Pollachi!


நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மகன் சந்தோஷ். 25 வயதான இவன் சென்னையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தான், அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கு மாணவி ஒருவரை காதலிப்பதாக நடித்து அவருடன் நெருங்கி பழகியிருக்கிறார்.

 

The tragedy of a student in Mayiladuthurai like Pollachi!

 

அந்த மாணவியின் தந்தை உடல் நலம் குன்றியவராக இருந்ததால் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அடிக்கடி வெளியூர் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்த்துவந்ததும், அந்த சமயத்தில் மாணவி தனியாக இருப்பதையும் சாதகமாக்கிக்கொண்ட சந்தோஷ் அடிக்கடி அந்த மாணவி வீட்டுக்கு செல்வதும், ஆசை வார்த்தை கூறி பாலியல் வண்புணர்வில் ஈடுபடவைப்பதும் வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறார். சுமார் ஓராண்டாக வீட்டில் பெற்றோர்கள் இல்லாததை சாதகமாக்கிக்கொண்டு நெருக்கமாக இருந்ததோடு, அதை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துக்கொண்டு, அந்த வீடியோவை தனது நண்பர் அக்கலூரைச் சேர்ந்த கண்ணன்  என்பவனுக்கு அனுப்பியிருக்கிறான்.

இந்த வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட கண்ணன். அந்த வீடியோவை எடுத்துக்கொண்டு வீட்டு உபயோகப் பொருள் விற்க செல்பவர்களைப்போல அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று, தனியாக இருந்த சிறுமியிடம் அந்த வீடியோக்களைக் காட்டி என்னோடு இணங்கிவரனும் இல்லன்னா உலகமே பார்க்கும்படி செய்துவிடுவேன் எனகூறி மிரட்டி இருக்கிறான். அதற்கு அந்த சிறுமி மறுத்திருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த 23 ம் தேதி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு போதையோடு பட்டப்பகலில் வீடு புகுந்த கண்ணன், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். நடுங்கிபோன சிறுமியோ கத்திக் கூச்சல் போட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பித்திருக்கிறான். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் மயிலாடுதுறை மகளிர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

The tragedy of a student in Mayiladuthurai like Pollachi!


முப்பத்தி ஐந்து வயதான கண்ணனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சந்தோஷ்குமாருக்கு வயது குறைவு என்றாலும் தவறானவர்களின் தொடர்புகளோ அதிகம். என்கிறார்கள் அந்த தெருவாசிகள்.

"நாகை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான போக்சோ சட்டம் பதிவாகியிருப்பது," வேதனை அளிக்கிறது என்கிறார்கள் பெற்றோர்கள்.

"பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்து அதை வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் மீண்டும் அடித்தும் சித்திரவதை செய்தும், பணம் பறித்த சம்பவம் நாட்டையே நடுங்கவைத்தது. அந்த குற்றத்திற்கு பின்னால் ஆளுங்கட்சி பிரமுகரின் வாரிசுகள் இருந்ததால் அந்த வழக்கு கானல் நீராகவே போய்விட்டது. அந்த விவகாரத்தில் கடுமையான தண்டனை கிடைத்திருந்தால் இதுபோன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருந்திருக்காது, அச்சம் கூடியிருக்கும் இதுபொல் சிறுமிகளிடம் கைவரிசை காட்ட தயங்கியிருப்பார்கள், அதில் காட்டிய அலட்சிய வழி இதுபோன்ற குற்றங்களை செய்ய இளைஞர்களை தூண்டுகிறது," என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.