Skip to main content

வீடு கட்டி தருவதாக கட்டுமான நிறுவனத்தை ஏமாற்றிய நபர்! 

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

The person who tricked the construction company into building the house!

 

திருச்சி நவல்பட்டு, அண்ணாநகரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜேஷ் ஆர்.பி.எம். என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் வந்த சேலம் ஒரு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் 100 ஏழைகளுக்கு குறைந்த விலையிலான வீடு கட்டி தர உள்ளதாகவும், அதற்கான கட்டுமான பணியினை ஆர்.பி.எம். நிறுவனத்திற்கே வழங்க உள்ளதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். 

 

இதனை நம்பிய ஆரோக்கிய ராஜேஷ், கொஞ்சம் கொஞ்சமாக 39 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். ஆனால் புதிய கட்டுமான பணிக்கான எந்தவித நடவடிக்கையும் ஏற்படுத்தவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆரோக்கிய ராஜேஷ் இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  புகாரின் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்