Skip to main content

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை; ஒருவர் கைது

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
person who sold banned tobacco was arrested

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இதனைத் தடுக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அரக்கோணம் - காஞ்சிபுரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது வெங்கடேசபுரம் அகன் நகர் பகுதியில் உள்ள கடையின் அருகே இருந்த நபர், போலீசாரைப் பார்த்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது குட்கா போன்ற புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அரக்கோணத்தைச் சேர்ந்த நாராயணன்  என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 337kg எடை கொண்ட ரூபாய்.3,00,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு நாராயணன் அனுப்பி வைக்கப்பட்டார்.

சார்ந்த செய்திகள்