Skip to main content

தி.மு.க. கிராம சபைக் கூட்டத்தில் மின் இணைப்பை துண்டித்த ஆளுங்கட்சியினர்!! டென்சனான கிராம மக்கள்!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
ip

 

    மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து, நம்முடைய செயல்பாடுகள் இனி அமையவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஜனவரி 9ம் தேதி அன்று தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. 


அதன்படி ரெட்டியார்சத்திரம், தெற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் கோனூர் மைதானத்தில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், பகுத்தறிவாளருமான ப.க.சிவகுருசாமி வரவேற்று பேசினார். 

 

இந்த கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முப்பெருந்துறை அமைச்சரும், மாநில துணைப் பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி பேசும்போது... கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தில் உள்ள கிராமங்கள் சீரழிந்து வருகின்றன.  கிராமங்களில் தண்ணீர் வசதி, மின்விளக்கு, சாலை வசதி இல்லாமல் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமப்படுகின்றனர் என்று ஐ.பி. பேசிக்கொண்டே இருக்கும் போது மைதானத்தில் மின் சப்ளை வரவில்லை.  இதனால் டென்சனான கிராம மக்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். அதன்பின் சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்சாரம் வந்ததின் மூலம் லைட் எரிய தொடங்கியது. அதைக்கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் ஆளுங்கட்சியினரின் சதியால் எங்களுடைய கிராம சபைக் கூட்டத்தை நடத்த விடாமல் மின்சாரத்தை கட் பண்ணிவிட்டனர் என்று சத்தம் போட ஆரம்பித்தனர். அதைக்கேட்ட ஐ.பி.யோ, அவர்களை சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் பேசத்தொடங்கினார். 

 

p

 

‘’தி.மு.க. ஆட்சியில் கோனூர் ஊராட்சிப் பகுதியில் பள்ளிக்கூட கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால் கடந்த எட்டு வருடங்களாக இந்த ஊராட்சியில் எந்த ஒரு அரசு நலத்திட்டமும் முழுமையாக செயல்படுத்தவில்லை’’ என குற்றம் சாட்டினர். கூட்டத்தில் பேசிய கிராம பெண்கள் கோனூரிலிருந்து குஞ்சனம்பட்டி செல்லும் வழியில் கோனூர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் செய்தனர். மேலும் கிராம மக்கள் கூறுகையில், கடந்த பொங்கலுக்கு அரசு சார்பாக வழங்கப்பட வேண்டிய ஒரு கிலோ பச்சரிசிக்கு 800கிராமும், ஒரு கிலோ ஜீனிக்கு 400கிராம் ஜீனியும் வழங்கப்பட்டதாக குறை கூறிய அவர்கள் மாதாமாதம் போட வேண்டிய 35 கிலோ அரிசிக்கு பதிலாக 30கிலோ வழங்குவதாகவும், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 20கிலோ இலவச அரிசியை நியாய விலைக்கடைகளில் வழங்குவதில்லை என குறை கூறினார்கள். பொதுமக்களின் குறைகளுக்கு பதில் அளித்து பேசிய இ.பெரியசாமி விரைவில் அந்த மதுபானக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், நியாய விலைக்கடையில் முழுமையாக ரேசன் பொருட்கள் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனுக்கள் கொடுக்கப்படும் என்றார். அப்போது பெண்கள், பொதுமக்கள் பலத்த கைதட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

 

இந்த கிராம சபைக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபாணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, கன்னிவாடி பேரூர் கழக தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், தர்மத்துப்பட்டி ஊராட்சி செயலாளர் பிரபாகரன், மாவட்ட மாணவரணி ராமமூர்த்தி, வெல்லம்பட்டி நல்லுச்சாமி, கோனூர் ஊராட்சி அவைத்தலைவர் சுப்பாபிள்ளை, கோவிந்தராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் ப.வேலுச்சாமியை ஆதரித்தும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும்  சௌந்திரபாண்டியனை ஆதரித்தும் செம்பட்டியில் உள்ள சந்தை திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமைதாங்கினார். ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், பகுத்தறிவாளருமான ப..கசிவகுருசாமி வரவேற்புரை ஆற்றினார்.

 

dmk

 

இக்கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசும்போது, 1972ம் ஆண்டு முதல் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக இம்முறை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்தது தோல்வி பயத்தில்தான் என்றார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணன் ப.வேலுச்சாமி அவர்கள் 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். அவரை அடுத்து பேசிய திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான அர.சக்கரபாணி பேசும்போது, 2016ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களை எதிர்த்து அதிமுக சார்பாக பண பலத்துடன் போட்டியிட்ட நத்தம் விசுவநாதன் ஆத்தூர் தொகுதியின் செல்லப்பிள்ளை அண்ணன் ஐ.பெரியசாமியின் மீது  தொகுதி மக்கள் வைத்திருந்த பாசத்தால்  அமோக வெற்றி பெற்றார். அதுபோல இன்று திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ப.வேலுச்சாமி அவர்கள் அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார்.

 

dmk

 

இறுதியாக பேசியாக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியோ... நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டம் கூட்டமா? மாநாடா? என்ற அளவிற்கு மக்கள் நிறைந்துள்ளார்கள். காரணம் மோடியின் ஆட்சி மீது உள்ள வெறுப்பு தான் என்றார். இந்தியா முழுவதும் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான தேர்தல் இது என்றார். மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

 

மக்களாட்சிக்காக மக்கள் நலனுக்காக காங்கிரஸ் பேரியக்க தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார். ஆனால் மோடியோ இந்தியாவின் நான்கு பணக்கார முதலைகளை காப்பாற்ற போராடி வருகிறார். புல்வாமா தாக்குதலின் போது மிக் ரக விமானங்களை அனுப்பியபோது நமது இராணுவவீரர் அபிநந்தன் எதிரிகளிடம் பிடிபட்டார். நான் கேட்பது பயன்படுத்த முடியாத மிக் ரக விமானத்தை அனுப்பியது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். ரபேல் விமான பேர ஊழலில் மோடி அவர்கள் சம்மந்தப்பட்டு இருப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். இதுபோல தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் முதற்கொண்டு அனைத்து அமைச்சர்களும் விசாரணை வளையத்தில் வருவது உறுதி. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றும். உங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் உங்கள் வீட்டில் உள்ள முதியோர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ப.வேலுச்சாமி அவர்களின் சிறந்த வேட்பாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்றார். 

 

 

 

இக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத்தலைவர் எஸ்.அப்துல்கனிராஜா, மாநகர தலைவர் எம்.சொக்கலிங்கம், மதிமுகமாவட்ட செயலாளர் எம்.செல்வராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எ.பி.மணிகண்டன், திராவிடர் கழகத்தை சேர்ந்த இரா.வீரபாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வ.அன்பரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த இ.எ.அல்தாப்உசேன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் எம். ரஹமத்துல்லா, மனித நேய மக்கள் கட்சி சேர்ந்த பழனி எம்.ஐ.பாரூக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் பி.அருள், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் மாநில செயலாளர் எம்.பசும்பொன்ராஜா, பார்வர்டு பிளாக் எஸ்.டி. மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராமன், ஆதிதமிழர் பேரவை மாவட்;ட செயலாளர் பி.காளிராஜ், மனிதநேய ஜனநாயக  கட்சி மாவட்ட செயலாளர் எ.அப்துல்காதர் ஜெய்லானி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் எம்.ஆண்டிச்சாமி மற்றும் ஒட்டன்சத்திரம் நகரசெயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் ஆ.நாகராஜ், தண்டபாணி, மார்கிரேட் மேரி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன், திண்டுக்கல் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, மாவட்;ட தொண்டரணி துணைச் செயலாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், நகர கழக செயலாளர்கள் சின்னாளபட்டி தி.கோபி, சித்தையன்கோட்டை சக்திவேல், அய்யம்பாளையம் அய்யப்பன், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், நெல்லூர் மலைச்சாமி, அய்யம்பாளையம் ரமேஷ் மற்றும் தோழமை கட்சிகள், ஆதரவு இயக்க நிர்வாகிகள்,கழக செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முருகேசன், ரெட்டியார்சத்திர வடக்கு ஒன்றிய செயலாளர் சு.மணி ஆகியோர் நன்றி உரை கூறினார்கள்!.

 

 

 

Next Story

அதிகாரிகளை மக்கள்  தண்டிக்க போகிற காலம் வரப் போகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

Published on 03/02/2019 | Edited on 03/02/2019
i


தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சிசபைக் கூட்டம் கடந்த ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து தொடங்கி வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்  நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். 
     

அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அம்பாத்துறை (மேலக்கோட்டையில்) ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு அப்பகுதி மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.   இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரான ஐ.பெரியசாமியை ஊர் பொது மக்கள்  மேளதாளத்துடன் வரவேற்றனர்
.  


இக்கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.  அம்பாத்துரை ரவி முன்னிலை வகித்தார்.  கிழக்குமாவட்ட துணை செயலாளர் தண்டபாணி வர வேற்புரையாற்றினார்.

 

i2


     அப்போது கூட்டத்திலிருந்து பெண்கள் பலர் தங்கள் பகுதியில் லைட் வசதி இல்லை. ரோடு வசதி இல்லை . குடிக்க கூட தண்ணீர் இல்லை. கழிப்பிட வசதி இல்லை முதியோர் உதவித்தொகையை நிறுத்தி விட்டனர் என பல்வேறு கோரிக்கைகளையும் குறைகளையும் கூறி தங்கள் வைத்திருந்த புகார் மனுக்களை ஐபியிடம் கொடுத்து அதை நிறைவேற்றி கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.

 

 அந்த புகார் மனுக்களை எல்லாம் ஒவ்வொன்றாக வாங்கி பிரித்துப் பார்த்து படித்து விட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை  எடுக்கிறேன் என தொகுதி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். அதன்பின் கூடியிருந்த தொகுதி மக்களிடம் பேசிய ஐ.பெரிய சாமியோ.... தமிழ் நாட்டில் தற்பொழுது மக்கள்விரோத அரசு தான் நடந்து வருகிறதே  தவிர மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது தலைவர் கலைஞர் ஆட்சியின் போது  340 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் கொடுத்தோம்.  அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி 50 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று  கூறியது.  ஆனால் தலைவரும் மத்திய அரசு வேண்டுமானால் உயர்த்தட்டும் அதை நாம் மக்கள் தலையில் வைக்க கூடாது நாமே அந்த  ஐம்பது ரூபாயை கொடுத்து விடலாம் என்று கூறி கொடுத்தார்.   அதுபோல் கேஸ் விலையை தொடர்ந்து ஏற்றாமல் இருந்தார்.  ஆனால் இன்று  ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்கிறது.  அந்த அளவுக்கு பல மடங்கு உயர்த்தி விட்டனர்.  இதற்கு காரணம் மோடி அரசுதான் அதை மாநில அரசும் கண்டு கொள்ளவில்லை.  தற்பொழுது தலைவர் ஆட்சி இருந்திருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்திருக்காது.  அதுபோல் தலைவர் ஆட்சியின்போதுதான் 24 லட்சம் பேருக்கு இலவச பட்டா கொடுத்திருக்கிறோம். அதேபோல் முதியோர் உதவித் தொகையும் 24 லட்சம் பேருக்கு கொடுத்திருக்கிறோம்.  அதில் நம்ம தொகுதிக்கு கொடுக்கப்பட்ட முதியோர் உதவித் தொகையில் 12 ஆயிரம் பேருடைய உதவித்தொகையை நிறுத்திவிட்டனர்.  இதைப்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சட்டமன்றத்திலேயே பேசினேன்.    அப்படி இருந்தும் கொடுக்கவில்லை.  அந்தப் பாவம் தான் அந்த அம்மாவை ஆட்டிப்படைக்கிறது.  அதுலையும் என்ன ஒரு கொடுமை என்றால் அண்ணன், தங்கச்சி இருவருக்கும் கண்ணு தெரியாது என்று தெரிந்து நான் அமைச்சராக இருந்தபோது ஐந்தே நிமிடத்தில் கையெழுத்துப் போட்டு அந்த ரெண்டு பேருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்தேன்.  

 


 அந்த உதவித் தொகையை கூட படுபாவிக நிறுத்திவிட்டார்கள்.  ஆனால் கூடிய விரைவில் உங்களுக்கெல்லாம் நிறுத்தப்பட்ட அனைத்து முதியோர் உதவித் தொகையும் வீடு தேடி வரக்கூடிய காலம் கூடிய சீக்கிரம் வரும் இப்பகுதியில் உள்ள மேலக்கோட்டை,  நடுப்பட்டி,  பெருமாள் கோவில் பட்டி,  முருகன்  பட்டி உள்பட பல கிராமங்களுக்கு தண்ணீர் வசதி இல்லை.  காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கொடுங்க என பலமுறை கலெக்டரிடம் வலியுறுத்தினேன்.   கலெக்டரும் அதிகாரிகளைக் கூப்பிட்டு சொன்னதாக சொன்னார். ஆனால் அதிகாரிகளும் இதுவரை மக்களின் குடிநீர் பிரச்சினையை கூட தீர்த்து வைக்க முன்வரவில்லை .  இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு  நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன்.  கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் வரும்.  அப்பொழுது  நான் கூட உங்களுக்கு தண்டனை கொடுக்க மாட்டேன்.   பொதுமக்கள் அந்த அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்கக் கூடிய காலம் வரும். அதுசீக்கிரமாகவருப் போகிறது அதை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.   அதேபோல் 100 நாள் வேலை சரியாக பொதுமக்களுக்கு கொடுப்பதில்லை அதுபோல் கூலியையும் குறைத்து கொடுத்து வருகிறார்கள் அதற்கெல்லாம் அதிகாரிகள் வருங்காலத்தில் பதில் சொல்ல வேண்டும் இங்குள்ள மக்கள் நெசவுத் தொழில் மூலம் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று நினைத்துதான் சாயப் பட்டறை ஒன்றை அமைக்க கோரி இந்த அரசிடம் வலியுறுத்தி அந்த சாயப்பட்டறை கூட என்னுடைய நிதியிலிருந்து ஒரு கோடி தருகிறேன் என்று துறை அமைச்சரான ஒ.எஸ். மணியிடம் கூறியிருந்தேன்.   அப்படி இருந்தும் இதுவரை சாயப்பட்டறை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.   இப்படி மக்கள் விரோத அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.   இப்படிப்பட்ட  அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய காலம்  வெகு தூரம் இல்லை  மே 15ல் மத்தியில்  ஆட்சி மாற்றம் அவசியம் ஏற்படும் அதன் மூலம் ராகுல்காந்தி  பிரதமராவார் அதன்பின் தமிழகத்தில் ஏற்படும் மாற்றம் மூலம் தலைவர் ஸ்டாலின்  முதல்வராக பொறுப்பேற்பார் அதன் மூலம் உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் குறைகளையும் நிரந்தரமாக தீர்த்து  வைக்கப்படும் என்று கூறினர் 


இக் கூட்டத்தில்  ஆத்தூர்  கிழக்கு ஒன்றிய  செயலாளரான பிள்ளையார்நத்தம் முருகேசன். ரெட்டியார்சத்திரம்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி. மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்  விவேகானந்தன் உள்பட நகர, ஒன்றிய பொறுப்பிலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.