பேரறிவாளன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்குப் பதில் ஆளுநரே முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (21/01/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'பேரறிவாளன் விடுதலை பற்றி குடியரசுத் தலைவருக்குப் பதில் ஆளுநரே முடிவு செய்வார். இது தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரமுள்ளது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் மூன்று (அல்லது) நான்கு நாளில் முடிவு எடுப்பார்' என வாதிட்டார்.
இதையடுத்து, பேரறிவாளனின் மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
விடுதலை தொடர்பாக முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என முன்பு கூறிய மத்திய அரசு, தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.