தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்கி்ல் என்.ஆர்.சி தொடர்பாக ஏதோ பாரம் கேட்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவ, பீதியில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தில் மினிமம் பேலன்ஸ் மட்டும் வைத்து விட்டு மீதப் பணத்தை எடுத்து வருகின்றனர். கடந்த 20 ஆம் தேதி மட்டும் ஒரு கோடிக்கு மேலாக பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு தகவல் பரவியதால் அந்த சென்ட்ரல் வங்கியின் நிர்வாகம், சேமிப்பு கணக்குகள் தொடர்ந்து வரவு செலவு ஆப்ரேட்டில் இருக்கவேண்டும். வருடங்களாக ஆப்ரேட் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக வருடம்தோறும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இதில் ஏதாவது ஒரு ஆவணம் தரவேண்டும் என்று வழக்கம் போல் கேட்பது நடைமுறை தான். அதற்காகக் கேட்கப்பட்டதுதான். வேறு பயம் கொள்ளத் தேவையில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.