திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள அவர்களது குலதெய்வம் பொண்ணாத்தம்மன் கோவிலுக்கு வருடம் ஒருமுறை சென்று பொங்கல் வைத்து, கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
![accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/ugmWg89lix1aLhx_vpUiZbasvaBkpnKjo6ibvCH0-60/1559124756/sites/default/files/inline-images/accident_7.jpg)
இந்த வருடம் மே 29ந் தேதி அதற்காக ஆண்டியப்பனூர் போய் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டு, நேர்த்திக்கடன் செய்துவிட்டு மினி லாரியில் இரவு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் அம்மக்கள். வெங்காளபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் சென்ற வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் சிவக்குமார் மகன் 8 வயதான செல்லத்துரை என்ற சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளான், மேலும் 20பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவ்வழியாக சென்றவர்கள், விபத்தில் காயம்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்து 108 வாகனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்துக்கும் தகவல் கூறினர். அவர்கள் வந்து சம்பவ இடத்தை பார்த்துவிட்டு, காயம்பட்டவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தசாமி மகன் அண்ணாமலை சேட்டு உண்ணாமலை காசியம்மாள் ஜெயா உள்ளிட்ட 12 நபர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.